Tuesday, 6 December 2011

தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கில்லை வாருங்கள்


தோழர்களே தோழர்களே
தூக்கம் நமக்கில்லை வாருங்கள்
தோளை நிமிர்த்தி
வாளை சுழற்றி
தொய்வில்லா நடை போடுங்கள்                             (2)

ஆதியிலிருந்து இன்று வரை அன்பாய் இருக்க சொன்னார்கள்
அடி வயிற்றில் ஈரத்துணி கட்டி தெம்பாய் இருக்க சொன்னார்கள்
போதுமடா இந்த போதனைகள் போதையில் ஏற்றிய பெரும்பொய்கள்
புயலை இனியும் தாலாட்டி பூட்டி அடைத்திட முடியாது
                                                                                                            தோழர்களே
பச்சைக்குழந்தைப்பாலின்றி பாலையில் விழுவது அகிம்சையா
பசிக்கு ரத்தம் குடிக்கும் பேய்களை போருக்கு இழுப்பது அதர்மமா
நிழலையும் திருடும்  நீசர்கள் முன்னே நேசக்கரங்கள் நீளாது அவர்
நிழலே விழாத திரு நாள் வரும் வரை சமரசம் போரில் கிடையாது
                                                                                                            தோழர்களே
பாடுபடும் திருக்கரங்களை பாழும் விலங்கா பிணைத்திடும்
பற்றி எரிந்திடும் பார்வைதனை பனியின் திரையா மறைத்திடும்
அச்சமில்லாத நெஞ்சங்கள் ஆடிப்புனலுக்கு அஞ்சிடுமா
துச்சம் உயிரெனும் கொள்கையிலே தூக்கிய கைகள் தவழ்ந்திடுமா
                                                                                                           தோழர்களே


நன்றி தோழர்   

தோழமையுடன் 
ரா.ராகுல் காந்தி @ தமிழ்தாசன்

No comments:

Post a Comment