Wednesday 14 August 2013

வாழ்க பாரத மணித்திருநாடு

தாய் நாட்டில் பாதி இந்தியனுக்கு உண்ண உணவு இல்லை ,உடுத்த உடை இல்லை ,இருக்க இடம் இல்லை,ஆனால் 67 வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சி கோட்டை கொத்தளத்தில் ------------ இன்று 9.30 மணிக்கு கொடி ஏற்றுகிறார்.

என் நாட்டு மக்களுக்கு உடுத்த உடை இல்லாமல் இருக்கும் போது இங்கு எதற்கு 1000 கொடிகள் வானில் ........

அதையும் விட நாட்டின் சுதந்திரதிருக்கு பாடுபட்ட பலரை மறந்து அதற்க்கு குந்தம் விளைவித்து நாட்டை விலை பேசியவர்கள் புகைப்படம் இன்று அனைவரின் கைகளில் ....

ஒரு பெண் சுதந்திரமாக இருக்க முடியாத இந்த நாடு சுதந்திர நாடு ...

அவன் இடத்தில அவன் மொழி பேச தடை,நம் உரிமைகள் கூட நாம் போராடித்தான் வாங்கும் நிலை ,இதருக்கு அந்த ஆங்கிலேயர்கள் பரவ இல்லை ....

விளைநிலம் பறிக்க படுகிறது ,நிலக்கரி காணமல் போகிறது ,காற்றை கூட திருடுகிறார்கள் ........

மக்களை மக்களே அடிக்கிறான் இதற்கு பெயர்தான் சுதந்திர நாடு ,,,,,

இந்த நாடு நாட்டு மக்களும் நாசமாய் போய்க்கொண்டு இருகிறார்கள் .
வாழ்க பாரத மணித்திருநாடு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday 6 December 2011

தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கில்லை வாருங்கள்


தோழர்களே தோழர்களே
தூக்கம் நமக்கில்லை வாருங்கள்
தோளை நிமிர்த்தி
வாளை சுழற்றி
தொய்வில்லா நடை போடுங்கள்                             (2)

ஆதியிலிருந்து இன்று வரை அன்பாய் இருக்க சொன்னார்கள்
அடி வயிற்றில் ஈரத்துணி கட்டி தெம்பாய் இருக்க சொன்னார்கள்
போதுமடா இந்த போதனைகள் போதையில் ஏற்றிய பெரும்பொய்கள்
புயலை இனியும் தாலாட்டி பூட்டி அடைத்திட முடியாது
                                                                                                            தோழர்களே
பச்சைக்குழந்தைப்பாலின்றி பாலையில் விழுவது அகிம்சையா
பசிக்கு ரத்தம் குடிக்கும் பேய்களை போருக்கு இழுப்பது அதர்மமா
நிழலையும் திருடும்  நீசர்கள் முன்னே நேசக்கரங்கள் நீளாது அவர்
நிழலே விழாத திரு நாள் வரும் வரை சமரசம் போரில் கிடையாது
                                                                                                            தோழர்களே
பாடுபடும் திருக்கரங்களை பாழும் விலங்கா பிணைத்திடும்
பற்றி எரிந்திடும் பார்வைதனை பனியின் திரையா மறைத்திடும்
அச்சமில்லாத நெஞ்சங்கள் ஆடிப்புனலுக்கு அஞ்சிடுமா
துச்சம் உயிரெனும் கொள்கையிலே தூக்கிய கைகள் தவழ்ந்திடுமா
                                                                                                           தோழர்களே


நன்றி தோழர்   

தோழமையுடன் 
ரா.ராகுல் காந்தி @ தமிழ்தாசன்

Monday 5 December 2011

இனி அவரது நினைவு

அண்ணல்  பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்தியா அரசியலமைப்பு 
சட்டத்தை, அவரோடு சேர்த்து புதைக்க பட்டு   இன்றோடு  55 வருடம் ஆனது.


சட்டங்களை மீண்டும் மீண்டும் கிழித்தெறிய பட்டுவிட்டது.

நிமிடங்களுக்கு ஒருமுறை திருத்த பட்டு வருகிறது.

ஆனால்  அண்ணல்  பீம்ராவ் அம்பேத்கர் அவர்களை மட்டும், 

அவர் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் மட்டும் அவரை திரும்பி பார்க்கிறோம்.




தோழமையுடன் 

ரா. ராகுல் காந்தி 

Sunday 25 September 2011

கலையும் இலக்கியமும் சங்கமித்த இடம் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ( த மு எ க ச )-2


கலையும் இலக்கியமும் சங்கமித்த இடம் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ( த மு எ க ச )-2


திண்டுக்கல் சக்தி போர் பறை முழங்க துவங்கியது அதை தொகுத்த திருமதி சந்திரா அவர்கள் மதுரை காவியமான கண்ணகி சிலம்பு எடுத்து கொண்டு மதுரை விதிகள் வழியாக அரண்மனை சென்று 




" இது வேறு சிலம்பு அது வேறு" சிலம்பு என்று படிய பாடலுக்கு பறை முழங்க அத்துடன் சிலப்பதிகாரத்தை தொகுத்த விதம் அழகு.சித்தரஞ்சன் தாஸ் மைதானமே முழங்கியது.போர் பறை இயக்குனர் திருமதி சந்திரா அவர்களுக்கு திரு தியாகராஜன் அவர்கள் நினைவுபரிசு வழங்கினர்.

சப்பத்த லக்ஷ்மி இசை குழு பாடலை பாடிமுடிக்க அவர்களுக்கு பாரத சன்சார் நிக்கம் நிறுவனத்தின் கணக்கு அலுவலர் திரு திலீப் நாராயணன் அவர்கள் நினயுவ்பரிசு வழங்கினர்.

மாநில துணை தலைவர் கவிஞர் நந்தலாலா பேச்சு சுவை துவங்கி கண் இலாதவர்கள் கண் இல்லாமல் உலகத்தை பார்க்க முடிய வில்லை .ஆனால் படிக்காதவர்கள் கணிருந்தும் முடியவில்லை.
என்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் பேசினார்.அவருக்கு திரு சுப்புராம் அவர்கள் பரிசு வழங்கினர்.

புயல் தப்பாட்ட குழு இறங்கியது அந்த இரண்டு சிறுமிகள் கரகம் அடியது அருமை டம்ளர் மீது கரகம் அடியது அருமை இன்னும் சொல்ல போனால் கைக்குட்டை , டால்டா டப்பா , வளையத்தை சுற்றியது ,சிறிய வளையத்துக்குள் உடலை திணித்து அதற்குள் ஒரு காலை எடுத்து போட்டு அடிய ஆட்டம்  இருக்கிறதே காண கண் கோடி வேண்டும்.கால்களினால் குங்குமம் எடுத்து இடுவதும் எல்லா முறையும் ஒருவர் தயாரான பிறகு மற்றும் ஒரு குழந்தை காத்திருப்பது அவர்களின் ஒற்றுமையை குறிக்கிறது.

திரு ஞானசம்பந்தன் நகைச்சுவை நாளை பார்போம்

தொடரும் ....................


தோழர்களுடன் நானும் 
தோழ்மையுடன் 
ரா.ராகுல் காந்தி @ தமிழ்தாசன் 

Saturday 24 September 2011

விபத்துகள்



ஒரு விபத்து நடந்தால் 
அதற்குள் எத்தனை உறவுகள் முறிக்கபடுகிறது
தகப்பன் குழந்தை 
கணவன் மனைவி 
காதலர்கள் 
என்று எத்தனையோ உறவுகள் 
கவனமாக பயணிப்போம் 
கவனமாக வாகனங்களை ஓட்டுவோம்.
ஒரு இயக்குனர் ஓர் கதை மூலம் சொல்லிருக்கிறார் .
எங்கேயும்  எப்போதும் ...........

இனி எந்த ஒரு ரத்த காயமும் வேண்டாம் ????????????????


தோழமையுடன் 
ரா .ராகுல்காந்தி @ தமிழ்தாசன் 

Monday 19 September 2011

கலையும் இலக்கியமும் சங்கமித்த இடம் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ( த மு எ க ச )-1

கலையும் இலக்கியமும் சங்கமித்த இடம் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ( த மு எ க ச )- 1
12 ஆவது மா நில மாநாடு கரிசலும்,கந்தகமும்,கண்ணீரும் கொண்ட  பூமியாம் விருது நகரில் 2011, செப் 16,17,18 ஆகிய நாட்களில் நடைபெற்றது மாநிலம் முழுதும் இருந்து 32 மாவட்டங்கள் கலந்து கொண்ட நிகழ்வு 


செப் 
18 அன்று சுமார் மாலை 7 மணி இருக்கும் விருதுநகர் சித்தரஞ்சன் தாஸ் மைதானத்தில் அமைக்கபடிருந்த
வில்லிசை வேந்தர் சாத்தூர் பிச்சகுட்டி அரங்கில் திரு தேனிவசந்தன் அவர்கள் வரவேற்ப்புடன் திரு மதுக்கூர் ராமலிங்கம் தொகுத்து வழங்க  த மு எ க ச வின் மாநில தலைவர் திரு தமிழ் செல்வன் அவர்கள் 4௦௦௦ தோழர்களுடன் துவங்கிவைக்க . தமுஎச இசைக்குழுவினரின் "சும்மா கிடந்த சங்க எடுத்து" என்ற  பாடலுடன் சங்கமம் ஆரம்பமாகிறது .அதனுடன் மழையும் மெல்ல  துவங்குகிறது. மலை அதிகமாவதுபோல் மக்களும் அதிகமாக வந்துகொண்டே  இருந்தனர்.இந்த பாடல் முடிந்தவுடன் திரு வசந்தன் குறுக்கிட்டு விருதுநகர் பாராளும் மன்ற தொகுதி உறுப்பினர் திரு .மாணிக்க தாகூர் அவர்கள் வந்திருப்பதை அறிவிக்கிறார். அவர் முதலில் கூறியது விருதுநகரில் நல்லவர்கள் வரும்போதொல்லாம் மழை வரும் என்று வாழ்த்துகள் கூறி விடைபெற்றார். அதை தொடர்ந்து ஏழிசை திருவுடையான் தபேல இசைத்து கொண்டே பாட .
மாவட்ட ஆட்சியர் திரு பாலாஜி ஆ. இ.ப . வந்தார் அவருடன் தமிழ்  செல்வன் ,சுப்புராஜ், பொது செயலாளர் சு.வெங்கடேசன் ,மணிமாறன் ஆகியோரும்  அரங்கில் தேனி வசந்தன் வரவேற்ப்புரை வழங்க சுமார் 4௦௦௦ தோழர்கள் இருக்ககுடிய 
அந்த கூடத்துக்குள் சாமியும்  வந்தது .மாவட்ட ஆட்சியர் சிறப்புரை மிகவும் அழகாக பேசினார். தமிழ் எப்படி பிறந்தது என்றும் எழுத்துகள் எங்கு பிறக்கிறது என்றும் 2௦௦௦ வருடம் பின்சென்று தமிழ் புலவர்கள் செய்த ஆராய்ச்சியை சுட்டிகாட்டினார்.அருமையாக கூர் ஜி பெரும் தொகை கேட்கும் இந்த காலத்தில் குறுந்தொகை பேசும் ஆட்சியர் என்று புகழாரம் சூட்டினர் .

அவருக்கு S.A.பெருமாள் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
அடுத்த படியாக மதுரை கிழக்கு தொகுதி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் பேசியபோது நாம் எப்படி ஆங்கிலம் மீது வெறியாக இருக்கிறோம் என்றும் நாம் காற்றில் 1 லட்சத்து 76 ஆயரம் கோடி திருடியதையும் கூறினார்.சாதியை உருவாக்கிய மனு என்பவன் மட்டும் கைல கிட்டதான் நடப்பது வேறு என்று உரையை நிறைவு செய்தார்.
அவருக்கு ஏகாதிபத்தியத்தை முற்றிலும் மறுத்து தனது நிறுவனத்தை அமெரிக்கர்கள் பல கோடிக்கு கேட்டும் தராத தோழர் பாக்யராஜ் (செல்வன் ஊறுகாய் நிறுவனர்) நினைவு பரிசு வழங்கினார்.
அடுத்த பதிவில்  திண்டுகல் சக்தி போர்ப்பறை பற்றி கூறுகிறேன்.



தொடரும்.......


தோழர்களுடன் நானும் 
தோழ்மையுடன் 
ரா.ராகுல் காந்தி @ தமிழ்தாசன் 

Thursday 7 July 2011



உயிர் பிரிந்தாலும் 
உன்னைப்  பிரியாத 
வரம் வேண்டுகிறேன் .......